யாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்!
காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பில் காணமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் தனது அடுத்த மாவட்ட ரீதியிலான பொதுமக்களுடனான சந்திப்பை ஜூலை 14ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் ஜூலை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது ஆணைக்குழுவிலுள்ள 7 ஆணையாளர்களும் பிரசன்னமாகவுள்ளதோடு காணாமற்போனோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள், ஊடகவியளாளர்கள் என்போரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவர்.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவர். இதன்போது காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்பலாம்." என அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment