Header Ads

test

மாகாணசபைத் தேர்தல் - கட்சித் தலைவர்கள் சந்திப்பு


மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை (01) நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை கட்சித் தலைவர்கள் ஒன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments