மன்னாரில் மைத்திரி!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தவர்கள் சகிதம் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மடுத் திருத்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதியின் வருகையினையடுத்து விசேட ஆராதனை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.
வழிபாட்டு நிகழ்வின் பின்னர் அங்கிருந்த மதகுருமார்களுடன் மைத்திரிபால சிறிசேன உரையாடியிருந்தார்.
Post a Comment