Header Ads

test

அனந்தி கதிரையில் டெனீஸ்: மீண்டும் தகர்ந்த தமிழரசு கனவு!

வடமாகாணசபையின் அமர்வு நாளை செவ்வாய்கிழமை 10ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பா.டெனீஸ்வரனை அனந்தியின் அமைச்சு கதிரையில் இருத்தி குழப்பங்களை மேற்கொள்ள தமிழரசுக்கட்சி நடத்திய சதி மீண்டும் தோற்றுள்ளது.

இன்று டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமுல்படுத்தாமை பற்றி பிரஸ்தாபிக்கப்படுமென தமிழரசு எதிர்பார்த்திருந்தது.ஆயினும் அது பற்றி கண்டுகொள்ளாது மேன்முறையீட்டு நீதிமன்றம் கைவிட்டமையால் தமிழரசு கடுமையான ஏமாற்றங்களிற்குள்ளாகியுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவினை நிறுத்த வேண்டும் என சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனத்தின் ஊடாக முதலமைச்சர் உச்ச நீதிமன்றில் ஓர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்த தன்னை சட்ட விதிமுறைக்கு முரணாக முதலமைச்சர் நீக்கியமை செல்லாது எனவும் தொடர்ந்தும் தானே அமைச்சர் என உத்தரவிடக்கோரி வடக்கு மாகாண அமைச்சர்களில் ஒருவலான பா.டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த வழக்கிற்கு இடைக்கால உத்தரவு வழங்கிய நீதிமன்றம் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கலாமென தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சர் என கடந்த வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவினை இடைநிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் தரப்பில் தற்போது சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனத்தின் ஊடாக உச்ச நீதிமன்றில் ஓர் றிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெனீஸ்வரனின் வழக்கு மீண்டும் இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு இரண்டு வார கால அவகாசம் கோரிய முதலமைச்சர் தரப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கி பிற்போடப்பட்டுள்ளது.அத்துடன் உச்சநீதிமன்றின் தீர்ப்பையே அமுல்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை அமர்வில் டெனீஸ்வரனை அனந்தியின் கதிரையில் நேரத்துடன் வருகை தரச்செய்து அமர வைக்க தமிழரசு திட்டமிட்டிருந்தது.குறித்த ஆலோசனையினை அவைத்தலைவரே வழங்கியிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இச்சதியும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை தமிழசினரிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதனிடையே அமைச்சர் கதிரைக்கு போராடும் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் தனக்கும் அறியத்தரவேண்டுமென அவைத்தலைவர் ஆளுநர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.  

No comments