இலங்கை

மட்டக்களப்பில் வீட்டுக்கள் நுழைந்தவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் சடலமாக ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் 44 வயதுடைய வச்தாறுமூலை வீசி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கராசா ஜீவானந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை மதிய உணவின் பின் வீட்டில் படுக்ககை அறைக்குள் நுழைந்த அவர் மாலை 5 மணிவரை வெளியில் வராதமையினால் அவரது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து பார்க்கும் போது உயிரிழந்து காணப்பட்டார்.

இதையடுத்து ஏறாவூர் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மரணம் குறித்து காவல்துறையினர் விரசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment