Header Ads

test

ரஷ்ய ஆயுத வியாபாரி கொழும்பு வருகிறார்


சிறிலங்காவுக்கு போர்த்தளபாடங்களை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்காக, ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rosboronoexport நிறுவனத்தின் தலைவர்  நிக்கி அலெக்ஸ்சான்ட்ரோவா அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார்.

எதிர்வரும் 29ஆம் நாள், தனி ஜெட் விமானத்தில்,  தமது குழுவினருடன் இவர் கொழும்பு வருவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தக் குழுவினர் சிறிலங்கா கடற்படைக்கு ஜிபார்ட்  போர்க்கப்பலை விற்பனை செய்வது உள்ளிட்ட ஆயுத தளபாட விற்பனைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிபார்ட் வகை போர்க்கப்பலை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யும் திட்டத்துக்குப் பதிலாக, எம்.ஐ-17 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யும் திட்டத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முன்வைத்திருந்தது.

எனினும், ஜிபார்ட் போர்க்கப்பல் தொடர்பான பேரத்தை தொடருவதில் ரஷ்யா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து பிரிஆர் வகையை சேர்ந்த 33 துருப்புக்காவிகள் கொள்வனவு செய்யப்படும் நிலையில், Rosboronoexport நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்

No comments