வடமாகாணசபையில் செலவிடப்படாதுள்ள உறுப்பினர்களது ஒதுக்கீட்டினை மீள பெற்றுக்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.வடமாகாணசபையின் ஆயுட்காலம் இன்னமும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் மாகாணசபை உறுப்பினர்களிற்கென ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சுமார் ஆறு மில்லியனிற்கான திட்டங்கள் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
குறித்த ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவுகள் தாமதமாக கிடைக்குமானால் அதனை செலவு செய்யமுடியாதென சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர் அவ்வாறு முன்மொழிவுகளை சமர்ப்பிக்காதவிடத்து அதனை மீள பெற்று புதிய திட்டங்களை சபை மூலம் முன்னெடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர்களிற்கு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க தலா ஆறு மில்லியன் ஒவ்வொருவருடம் ஒதுக்கீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment