Header Ads

test

புதிய அரசியலமைப்பு வெறும் கனவுதான் - மனோ


புதிய அரசியலமைப்பு என்பது கனவாகவே இருக்கும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசாங்கத்தின் காலம் கடந்து விட்ட நிலையிலேயே இந்த கருத்தை தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,

தனிப்பட்ட ரீதியில் புதிய அரசியலமைப்பு தேவை என்று தாம் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதில் பல பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டியுள்ளது. இந்தநிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திலேயே புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், பல பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் எனினும் அது நடக்கவில்லை.

எனவே அரசாங்கத்தின் காலம் முடிவடையப் போகின்ற போது புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments