Header Ads

test

வெளியேறினார் ஒஸ்ரின் பெர்னான்டோ!

இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் முரண்பட்டு அவரது செயலளரான ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தனது கீச்சகத்தில் இன்று வெளியிட்டது. எனினும் அவரது திடீர் பதவி விலகலுக்கான காரணம் எவையும் அதில் குறிப்பிடப்படவில்லை.

வுடமாகாண ஆளுநராக பணியாற்றிய அவர் பின்னர் அப்பதவியிலிருந்து விலகி ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைப்பது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதிலுக்கு போர் வெற்றிவீரர்களென படையினரது தூபிகளை அமைக்கவேண்டியிருக்குமென மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments