முதலமைச்சரை தனியே சந்தித்த சயந்தன்!

வடமாகாணசபையின் 126வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தபோது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை சபைக்கு கொண் டுவந்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் இன்று முதலமைச்சரினை தனித்து சந்தித்துள்ளமை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சராக பா.டெனீஸ்வரனே தொடர்ந்தும் இருப்பார் எனவும், அதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது. எனவும் கூறியதுடன், அரசிய லமைப்பின் படி இறைமை மக்களுக்குரியது. அந்த இறைமையை மக்கள் நம்பிக்கை பொறுப்பாக எங்களிடம் கொடுத்துள்ளார்கள். ஆகவே நாம் நம்பிக்கை பொறுப்பாளிகள். அந்தவகையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு பிரகாரம் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்வதற்கு  இடமளிக்காமை மக்களின் இறமையை மலினப்படுத்தும் ஒரு செயலாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் ஆளுநர் மாகாண அமைச்சர்கள் 4 பேரும் யார்? என உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளாரென கூறியிருந்தார். ஆனால் அதனை மறுத்த முதலமைச்சர் அவ்வாறு எதுவும் தன்னிடம் கேட்கப்படவில்லை என்றார். 

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு முன் வரிசை ஆசனம் தேவையாக இருந்தால் எனது ஆசனத்தை தருகிறேன். அவருக்கு கொடுங்கள் என கூறினார். இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தனிப்பட்ட ஒருவருக்கு இழுக்கை ஏற்ப டுத்தும் வகையில் சிவாஜிலிங்கம் பேசுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் முதலமைச்சரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து நீண்ட நேரம் சயந்தன் உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திப்பில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் தகவல்கள் ஏதும் வெளிவந்திருக்கவில்லை.

திங்கட்கிழமை வடமாகாணசபையின் அமைச்சர்கள் யாரென்பது பற்றிய ஆய்வினை செய்ய வடமாகாணசபை தண்டமாக கூடவுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சரினை அவரை பதவி கவிழ்ப்பதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் ஒருவரான சயந்தன் இரகசியமாக சந்தித்து பேசியுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment