Header Ads

test

காவல்துறை அதிகாரம் வேண்டும்:முதலமைச்சர்!

வடமாகாணசபைக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி காட்டுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பணத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாள்வெட்டு சம்பவங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்து வரும் நிலையில், முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே யாழ்.மாவட்ட வன்முறைகளின் பின்னணியில் படையினர் இருந்தால் தயவு தாட்சண்யமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தெரிவித்துள்ளாராம்.அவர்களது பதவி நிலை கவனத்தில் கொள்ளப்படமாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டு வன்முறைகளின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இருப்பதாகவும் அவரது ஆதரவு இராணுவ புலனாய்வு கட்டமைப்பினரே அதனை வழிநடத்துவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments