Header Ads

test

குற்றவாளிகள் தலைமறைவாம்:காவல்துறை விளக்கம்!

யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட பலர் தலைமறைவாகியிருப்பதாக இலங்கை காவல்துறை சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துள்ளது.வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் தலைமறைவாகி இருப்பதாகவே வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் றொசான் பெர்னாண்டோ கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்படுகிறது . இதற்காக யாழ்ப்பாண காவல்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட காவல்துறையினரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொள்ளை,போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் நெருங்கிய உறவை இலங்கை காவல்துறை பேணிவருவதாக வடக்கு முதலமைச்சர் பகிரங்கமாகவே குற்றஞ்சுமத்திவருகின்றார்.அண்மையில் யாழ்.வருகை தந்திருந்த காவல்துறை அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை ஏற்றுக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments