காவல்துறையிடம் ஒப்படைத்த தங்கத்தை காணோம்!
இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்டு இலங்கை காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட நகைகள் தொடர்பில் பத்துவருடங்களின் பின்னர் புதிய அரசு தேடத்தொடங்கியுள்ளது.குறித்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தீர்கள். யுத்தம் முடிந்ததன் பின்னர், அலரி மாளிகைக்கு கொள்கலனில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் தங்கம் மற்றும் பணத்திற்கு என்ன நடந்ததது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்துள்ள அவர் இராணுவத் தளபதியிலிருந்து தான் ஓய்வு பெற்றதன் பின்னர் அது அலரிமாளிகைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். தான் இருக்கும்போது சுமார் 220 கிலோ தங்கத்தை மீட்டதாகவும் அவற்றை தாம் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப எழுத்து மூல ஆவணங்களுடன் வவுனியா காவலதுறையிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார்
Post a Comment