Header Ads

test

வடக்கில் மீண்டும் இராணுவப்புலனாய்விற்கு புத்துயிர்!


இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் இராணுவ புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை மேம்படுத்த முன்னாள் உளவாளிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாயவின் விசுவாச பிரிவான இராணுவப்புலனாய்வு பிரிவை நம்ப மறுத்த ரணில் தேசிய காவல்துறை புலனாய்வு பிரிவினை மேம்படுத்த முற்பட்டிருந்தார்.இதற்கு ஏதுவாக இராணுவப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் இரத்துச்செய்யப்பட்டது.அத்துடன் விரும்பியவர்களை தமது சொந்த ஊர்களிலுள்ள இராணுவ தலைமையகங்களுடன் இணைந்து பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும் அண்மையில் தொடர்ச்சியாக வன்னியில் அரங்கேற்றப்பட்ட கைதுகளை தொடர்ந்து இராணுவ புலனாய்வு பிரிவை மேம்படுத்த ரணில் அரசு ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளது.

இதனிடையே வடக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள்; அனைத்தும் இராணுவப்புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகக்குற்றச்சாட்டுக்களை குடாநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபை அமர்வில் யார் யார் என்னென்ன பிரேரணைகள் கொண்டு வருகின்றார்கள்? யார் என்ன பேசவுள்ளனர்? என்பதை சபை அமர்வுக்கு முன்னதாக இராணுவப் புலனாய்வாளர்கள் அறிந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபைக்குள் இராணுவப்புலனாய்வாளர்களின் ஊடுருவல் ஏற்பட்டிருப்பது சபை உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments