யாழில் குள்ளமனிதர்கள்:பொய்யென்கிறது காவல்துறை!
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் எவரினதும் செயற்பாடுகள் இல்லை. எனவே, மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் இடம்பெறுவதாகவும் இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், ஊடகங்களில் தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது சுமூக நிலை நிலவுகிறது. இந்த நிலையில், கிரீஸ் மனிதர்கள் என மர்ம மனிதர்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், ஆவா குழுவினரின் செயற்பாடுகளும் தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை.வெறுமனே சுற்றித் திரிபவர்களின் சில செயற்பாடுகள் உள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 நான்கு பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
Post a Comment