Header Ads

test

மல்லாகம் சூட்டுச் சம்பவம் - கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை


மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் வழக்குத் தொடர்பில் கண் கண்ட சாட்சிகள் எவராவது இருப்பின் தெல்லிப்பளை பொலிசாரிடம் அல்லது மல்லாகம் நீதிமன்றில் சாட்சியம் வழங்க முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,

மல்லாகம் பகுதியில் கடந்த 2018-06-17 அன்று இரவுப் பொழுதில் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவும் தனது கவனத்தை கொண்டுள்ளது. இது தொடர்பில் எமது ஆரம்ப விசாரணைகளின் நிமித்தம் பொலிசார் ஓர் அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளனர். குறித்த அறிக்கையின் பிரகாரம் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சி  எவருமே சாட்சியம் கூற முன்வரவில்லை. எனத் தெரிவித்துள்ளனர்

இதன் காரணத்தினால் குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தமது சாட்சியத்தினை பதிவு செய்ய முடியும்.

No comments