விஜயகலா தொடர்ந்தும் அமைச்சர்?
விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் எடுக்கப்படவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் புலிகள் அமைப்பு அவசியம் என தெரிவித்த கருத்து தவறென குறிப்பிடப்படும் நிலையில் அவர் தரப்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய அந்த உரை குறித்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு, நியாயமான அறிக்கையொன்றை, கட்சியின் தலைவருக்குச் சமர்பிக்கும். ஆனால், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கட்சி உறுப்புரிமையும் பறிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்” என்று தெரிவித்த அவர், “வடக்கு மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதற்காக சர்ச்சைக்குரிய உரை நிகழ்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டியது மக்கள் தலைவர்கள் சகலரினதும் கடமையாகும்” என்றார்.
தெற்கு மக்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி விவகாரத்தில் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புலிகளை நினைவுகூர்ந்த 5 சம்பவங்கள் தொடர்பிலான காணொளிகள் கிடைகப்பெற்றுள்ளன. இந்நிலையில், “காணொளிகளை மையப்படுத்தி, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தக் காட்சிகளில் உள்ளவர்கள் தொடர்பிலான விவரங்களும் அறியப்பட்டுள்ளன.
“அனுமதியளிக்கப்படாத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு அவதானத்துடன் இருக்கும். மேற்படி நினைவு கூரும் நிகழ்வுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதில்லை. மாறாகத் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்படுபவை என்றும் அறியமுடிந்துள்ளது.”
நினைவுகூர்தலை, உள்நாட்டு மக்களும் விரும்பவில்லை. புலம்பெயர் அமைப்புகளின் வழிநடத்தலின் பிரகாரமே, குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனத் தெரியவந்துள்ளது” என்றார்.
Post a Comment