Header Ads

test

சுமந்திரன் கைவிட்டார்:டக்ளஸ் கை கொடுத்தார்!


வடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிப்பதை தடுப்பது தொடர்பில் இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கொழும்பிற்கு அழைத்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எம்மை சந்திக்காது கூட ஏமாற்றிவிட்டாரென வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலையே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் , கொழும்பில் சென்ற எமது தொலைபேசி அழைப்புக்களிற்கு சுமந்திரன் பதில் கூட அளிக்கவில்லை.அவருடன் உரையாடியதன் பிரகாரம் கடற்றொழில் அமைச்சரை சந்திக்க புறப்பட்டு வந்திருந்த நிலையிலேயே தாம் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்த தாம் முன்னாள் அமைச்சர் டக்ளஸின் உதவியை நாடியதாகவும் இறுதியில் அவரே கடற்றொழில் அமைச்சரை சந்திக்க உதவியதாகவும் மேலும் தெரிவித்தார்.

எமது சில அரசியல் வாதிகள் ஒரு படகில் இருவருக்கு மேல் கடலட்டை பிடிக்க செல்ல கூடாது, இரவில் வெளிச்சம் பாய்ச்சி பிடிக்க கூடாது , கரையில் இருந்து ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றே பிடிக்க வேண்டும் என்பது இலங்கையில் உள்ள சட்டம். அதனை வடமராட்சி கடலில் கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் பின் பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 

எமது கடல் வளத்தை பாதுகாக்கும் எந்த எண்ணமும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செயற்பட்டு உள்ளார்கள். எனவே எமது கடல் வளத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் என கோருகின்றோமென தெரிவித்தார்.

No comments