தமிழ்நாட்டில் போலிக் கடவுச்சீட்டு தாயாரிக்கும் இலங்கையர்கள் இருவர் கைது
தமிழ்நாட்டில் போலி விமான கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையர்கள் இந்தியர்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில் குறித்த கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளதுடன், இது தொடர்பில் 11 சந்தேகநபர்கள் ஏற்கனவே இந்திய பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
10 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு இலங்கையர்களும் சுற்றுலா வீசா மூலம் தமிழ் நாட்டுக்கு வருகைத் தந்து, வெளிநாடு செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகள் கிடைக்கும் வரை வீடொன்றில் தங்கியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு இலங்கையிலுள்ள சிலர் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள், குறித்த சுற்றிவளைப்பின் போது, இந்திய கடவுச்சீட்டுகள் 77 இலங்கை கடவுச்சீட்டுகள் 12 மற்றும் இவற்றைத் தயாரிப்பதற்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Post a Comment