மகிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்பிரமணிய சுவாமி
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி தலைவராக இருக்கும், விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பின் பொதுக் கூட்டத்தில், செப்ரெம்பர் 12ஆம் நாள் உரையாற்றவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து தேசப் பற்றாளர்களையும் பங்கேற்குமாறு, தனது கீச்சகப் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
Post a Comment