Header Ads

test

ஈரான் வெளிவிவகார அமைச்சர் மைத்திரியுடன் சந்திப்பு


சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விருப்பம் வெளியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சர், சக்தி, விவசாயம், தொழில்நுட்ப –பொறியியல் சேவைகள் போன்ற துறைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணங்கியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணம் தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் மற்றும் சிறிலங்கா அதிபருடனான சந்திப்புகள் தொடர்பான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக இன்று காலை வரை சிறிலங்கா அதிபர் செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments