Header Ads

test

திருமலையில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது! கருவிகளும் மீட்பு!

திருகோணமலை தலைமை பொலிஸ் காரியலயத்திற்க்கு உட்பட்ட ஜமாலியா பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களை கைதுசெய்ததாக தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 3 நபர்களும் ஜமாலியவைச் சேர்ந்த 2 நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தும் ஸ்கேனிங் சாதனத்தையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியதாக பொலிஸா்ர தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

No comments