வவுனியாவிலும் வடமாகாண சுகாதார அமைச்சர் பாய்ச்சல்!
முல்லைதீவினை தொடர்ந்து வவுனியாவிலும் வடமாகாண சுகாதார அமைச்சர் திடீர் பாய்ச்சலை நடத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி.குணசீலனின் அதிரடியில்; போலி வைத்தியர்கள் மூவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது. மேலும் இரண்டு பிரபல வைத்தியசாலைகள் மற்றும் இரண்டு மருந்தகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களில் வவுனியா நெழுக்குளத்தில் சர்ச்சைக்குரிய வைத்தியரும் தனது கல்வி தகைமைக்கு மேலான வைத்தியத்திலீடுபட்டுவந்த நபரும் அகப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த நபரிடமிருந்த பெரும்பாலான ஆங்கில மருத்துவ மருந்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்திய கலாநிதி.குணசீலன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தூண்டுதலில் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment