மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சதொச விற்பனை நிலையம் இருந்த பகுதியில், புதிய கட்டடத்தை அமைக்கத் தோண்டிய போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கை பல வாரங்களாக நீடித்து வருகிறது.
இதன் போது, பல எலும்புக்கூடுகள் முழுமையாகவும், சில பகுதியாகவும் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 38 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பெருமளவு எலும்புக் கூடுகள் அந்தப் பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது.
போதிய வசதிகள் இல்லாமையால், புதைகுழியைத் தோண்டும் பணிகள், மிக மெதுவாகவே இடம்பெற்று வருகின்றன.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment