18 இலங்கை அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் நகரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர்களை ஏற்றிய சிறப்பு விமானம், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
18 அகதிகளுக்கும், பாதுகாப்பாக தலா இருவர் வீதம், 36 அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும், இந்த சிறப்பு விமானத்தில் வந்தனர்.
சிறிலங்கா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட 18 இலங்கை அகதிகளும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Post a Comment