Header Ads

test

இளைஞர் சமூகத்தின் இருளைப்போக்கிய நிலா மறைந்து 11 வருடம்!

சகாதேவன் நிலக்சன், கொக்குவிலை வசிவிடமாக கொண்ட யாழ் இந்துக்கல்லூரி மாணவன் என்று சாதாரணமாக கூறிவிடமுடியாது.

ஏனெனில் நிலா தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னால் தலைவராகவும் போசகராகவும் இருந்ததுடன் ஊடகவியல் மாணவராக இருந்த போதே தமிழ் மாணவர் ஒன்றியத்தின் உத்தியோக பூர்வ பத்திரிகையான சாளரம் மற்றும் உத்தியோக பூர்வ செய்தி தளமான 'தராகி' ஆகியவற்றின் இணை ஆசிரியராக செயற்பட்டு சமூகபிரச்சனைகள் இராணுவ ஆக்கிரமிப்புக்களை வெளிக்கொணர்வதற்காக பாடுபட்டவன்.

தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் தமிழ் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு திட்டமிட்டு தடைகள் ஏற்படுத்தப்படுவதனை தடுத்து யாழ் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் யாழ் இந்து கல்லூரியின் தமிழ் சங்கம் முடிவெடுத்தது அதன் விளைவாக யாழ் குடாவில் உள்ள ஏனைய பாடசாலை மாணவர்களையும் இணைத்து யாழ் தமிழ் மாணவர் ஒன்றியத்தினை உருவாக்கிய பெருமை நிலகசன் மற்றும் குணேந்திரனை சாரும்.

நல்லூர் பின் வீதியில் மாங்கோ உணவகத்திற்கு அருகே உள்ள வீட்டில் அலுவலகம் அமைத்து வெளி மாவட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்பதற்கும், ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில வகுப்புக்கள் நாடாத்துவதற்கும், சுனாமியின் பின்னர் 'சுனாமி கல்வி நிவாரணப்பணி' என்கின்ற திட்டத்தினை ஏற்படுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட யாழ் மற்றும் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மேம்பட பாடுபட்டதுடன் கலாச்சார சீரழிவுகள் மூட நம்பிக்கைகளை எதிர்த்து நின்றவன்.2005 இற்கு பின்னரான காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்கள் என கருதப்படுவோரால் பல ஊடகவியலாளர்கள், மாணவர்கள், கல்விமான்கள் சமூக நல செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டார்கள்.

இதன் காரணமாக பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய வேளையில் நிலா பேனாவை ஏந்தினான். இவனது செயற்பாடுகள் தமிழின விரோதிகளுக்கு எரிச்சல் மூட்டியிருந்தது. அதன் விளைவாக யாழ் குடா நாட்டில் துணைராணுவ குழுவின் வானொலியில் (இதய  வீணை) நிலா மற்றும் இவனது நண்பர்களின் பெயர் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.

 'குறி வைக்கப்பட்டு விட்டோம்' என்பதற்கான எச்சரிக்கையாகவே அதனை பலரும் பார்த்தார்கள். நிலக்சனின் நண்பர்கள் சிலர் கடத்தப்பட்டதுடன் சிலர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியும் இருந்தார்கள்.

 நீதியும் உரிமையும் கேட்ட பலர் மறைந்து வாழும் நிலை ஏற்பட்டது.

ஆயினும் நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது தன் கடமையினை சரிவர செய்துகொண்டிருந்தான் நிலக்சன்.

2007 ஓகஸ்ட் 01 ம் திகதி அதிகாலை 5 மணியளவில் (நடமாட்ட தடை இராணுவத்தினரால் விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இராணுவ நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில்) மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அவரது பெற்றோர் முன்னிலையில்   வீட்டில் வைத்து  சுட்டுக்கொல்லப்படடார் .

சம்பவம்  பற்றி நிலக்சனின்  தந்தையார் ராசரத்தினம்   சகாதேவன் தெரிவிக்கையில்

விடிகாலை 5.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள எமது வீட் டின் முன்புறக் கதவை ஏறிப்பாய்ந்து கடந்து மூவர் உள்ளே வந்தனர். அவர்கள் வீட்டின் கதவைத் திறக் கும்படி கோரினர். நாம் மறுத்தோம்.

வந்தவர்கள் கதவை உடைத்துத் திறந்து உள்ளே புகுந்தனர். எமது இரு மகன்மாரின தும் பெயர்களைக் கேட்டனர். நாம் பெயர் களைக் கூறினோம்.

இளைய மகனான நிலக்ஷனுடன் தாங் கள் பேச வேண்டியுள்ளது எனத் தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர். எங்களை வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் அவர்கள் பணித்தனர்.

வீட்டு "போர்ட்டிக்கோ'வில் வைத்து அவர்கள் உரையாடும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முன் "கேற்'றைப் பாய்ந்து ஓடி னார்கள். மகன் சுடுபட்டு விழுந்து கிடந்தார்.


வந்தவர்களில் ஒருவர் நீளக் காற்சட்டை யும் சேட்டும் அணிந்திருந்தார். மற்றைய இருவரும் அரைக் காற்சட்டையும் சேட் டும் அணிந்திருந்தனர் என்றார்


தனது இனத்தின் கல்வி கலாச்சார மேம்பாட்டு உரிமைக்காகபாடுபட்ட நடுநிலையான ஊடகவியலாளனின் பயணம் முற்றுப்பெற்றுவிட்டது.


No comments