Header Ads

test

யாழில் இப்தார்:வடக்கு முதலமைச்சரும் இணைந்தார்!

மூவின மக்களும் பகைமைகளை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகோதரர்களாக வாழத்தலைப்பட்டிருப்பார்களேயாயின் 1990களில் ஒரு இடம்பெயர்வு ஏற்பட்டிருக்காது,

 தம்புள்ளையில் அமைந்திருந்த பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டிருக்காது. கண்டியில் அண்மையில் நடைபெற்ற சம்பவம் போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது,காலத்திற்குக் காலம் கரியேற்றும் கப்பல்களில் தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏற்றி அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள். மாறாக அறிவில் சிறந்து விளங்கும் புத்திஜீவிகளைக்கொண்ட ஒரு ஐக்கிய இலங்கையாக பரிணமித்திருக்குமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பெரியபள்ளிவாசல் முஸ்லீம் மக்களது அழைப்பின் பெயரில் ரம்ழான் நோன்பின் இப்தார் நிகழ்வில் முதலமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டிருந்தார்.

அவர் தனதுரையில்  இன்றைய இந்த முஸ்லீம் மக்களுக்கான இனிய நன்நாளில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு எமக்குரிய உரித்துக்களுடன் நிலைபேறான வாழ்க்கையை முன்னெடுக்க அனைத்து மதங்களும் உதவவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வுடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முஸ்லீம் மக்களிற்கெதிராக செயற்படுவதாக சில தரப்புக்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் முதலமைச்சரின் அண்மைய நடவடிக்கைகள் அதனை பொய்ப்பித்துவருவதாக முஸ்லீம் மதபிரமுகர்கள் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments