சிவமோகனின் ஆதரவாளர்கள் குணசீலனிற்கெதிராக ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் பிரச்சினைகள் நிலவுவதாக தெரிவித்து தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் ஆதரவாளர்கள் இன்று (25) மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்தகங்கள் மூடப்பட்டமை, மருத்துவமனைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை மாற்றுதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று நடைபெற்றுவரும் நிலையில், இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், அமைச்சர் ரிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலரிடம் இதன்போது மனுக்கள் கையளித்திருந்தனர்.
வைத்தியரான சிவமோகனிற்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலனிற்குமான மோதல்களின் தொடர்ச்சியாக முல்லைதீவில் சுகாதார துறையில் கிடுக்கிப்பிடியை முன்னெடுத்துவருகின்றார்.இதன் தொடர்ச்சியாகவே அவரிற்கு தலையிடியை தர ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Post a Comment