இலங்கை

புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்

புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“எனக்கு அடுத்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு பெருமளவு மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
முதலாவதாக, கட்சி எனக்கு போட்டியிட இடமளிக்கும் வாய்ப்பு உள்ளது.  இல்லாவிட்டால், நான் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டியிருக்கும். இல்லையேல், தனிக் கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.
என் மனதில் அப்படியான எண்ணமில்லை. திட்டவட்டமாக எதுவுமில்லை.
கட்சி எதையாவது தொடங்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை.
ஆனால், அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment