தனி ஆட்சி அமைக்க தாயாராகிறது ஐ.தே.க - ஆதரவு வழங்க கூட்டமைப்பிடமும் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்து ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தலைமையில் எதிரணியினருடன் இரகசிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு அவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களின் உதவியுடன் ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் இதற்கு வெளியிலிருந்தேனும் ஆரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் தேசிய அரசாங்கம் என்பது இல்லாது போகுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment