Header Ads

test

வாகன பெமிட் வியாபாரம்:அதிகாரிகள் கொழும்பில்!

வடமாகாணசபையின் அதிகாரமட்டத்தை சேர்ந்த பலர் கொழும்பில் முகாமிட்டிருப்பதால் நிர்வாக பணிகள் முடங்கியிருப்பதாக வடமாகாண அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.இலங்கை அரசினால் வழங்கப்படும் கார் பெமிட்களை நல்ல விலைக்கு விற்பதற்கே அதிகாரிகள் பலரும் கொழும்பில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

வடமாகாணசபை உறுப்பினர்களை தொடர்ந்து அரச அதிகாரிகளிற்கு வாகன வரிவிலக்கு பெமிட்கள் அரசினால் வழங்கப்பட்டுவருகின்றது.

இதனையடுத்து அதனை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் முண்டியடித்து கொழும்பில் தங்கியுள்ளனர்.ஏற்கனவே வடமாகாணசபை உறுப்பினர்கள் தமது பெமிட்களை தலா 70 இலட்சம் வரையில் விற்றுவருவாய் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகளோ சராசரியாக 25 இலட்சம் வரையிலேயே தமது பெமிட்களை விற்பனை செய்ய முடிந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வைத்தியர்கள் பெமிட் விற்பனை தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரிகளும் மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அதிகாரிகள் பலரும் கொழும்பில் தங்கியிருப்பதால் அமைச்சு வேலைகள் பாதிக்கப்படுவதாக அமைச்சர்கள் மட்டத்தில் புறுபுறுப்பு ஏற்பட்டுள்ளது.

No comments