Header Ads

test

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்


ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 158 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்படவுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு,யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறையிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையிலும், இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.

மண்டைதீவில் படகுகள் நங்கூரம் பாய்ச்சும் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தலா 8 மீன்பிடித் துறைமுகங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மீன்பிடித் துறைமுகங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 மீன்பிடித் துறைமுகங்களும், திருத்தப்பட வேண்டியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

No comments