தமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா!
தமிழ்தேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள கடற்றொழிலை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியில் தெ ன்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்கியிருப்பதும், அவர்கள் கடல்வளத்தை அழிப்பதற்கும் பின்னால் உள்ள நோக்கம். தமிழ் மக்கள் இந்த நோக்கத்திற்கு எதிராகவே போராடவேண்டும்.
மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பல ம் கூறியுள்ளார். மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்கள் 1500ற்கும் மேற்பட்டவர்களை உடன் வெளியேற்றக்கோரி மருதங்கேணி கடற்றொழிலாளர்கள் தொடர்ச் சியாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இது குறித்து கருத்து கூறும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில், சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் கரையோர பகுதிகளை தமிழீழ விடுதலை புலிகள் விசேட பகுதியாக பிரகடனப்படுத்தி வேலைத்திட்டங்களை செய்திருந்தார்கள். அதேபோல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களும் வடகிழக்கு மாகாணங்களின் கரையோரங்களை மையப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு காரணம் ஒன்றுதான். அந்த காரணம் வடகிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஒடுங்கினால் தமிழ்தேசத்தை ஒடுக்குவதற்குச் சமனாகும் என்பதே அந்த காரணம். தமிழ்தேசத்தின் பொருளாதாரம் கடற்றொழிலிலும், விவசாயத்திலும் தங்கியிருக்கின்றது.
இது இரண்டையும் அழித்தால் தமிழ்தேசத்தை அழிப்பதற்கு சமனாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு, கொக்கிளாய் தொடக்கம் சிங்கள மீனவ ர்கள் குடியேற்றப்பட்டார்கள். அங்கு தொடங்கி வடமராட்சி கிழக்குவரை திட்டமிட்டு தமிழரல் லாதவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இவை அனைத்துக்கும் இந்த நாட்டின் இராணுவமும், கடற்படையும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த விடயத்தை எமது மக் கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
இன்றைக்கு மருதங்கேணியில் இருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்றினால் அது வேறு இடத்தில் நடக்கும். அதற்காக தென்பகுதி மீன வர்களை வெளியேற்றகூடாது என அர்த்தப்படாது. ஆகவே இந்த விடயத்தை மக்கள் சரியாக உணர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 40 வருடங்கள் பொருளாதாரரீதியாக பின்தங்கியிரு க்கும் எமது மக்கள் ஒட்டுமொத்தமாக எமது கரையோர வளங்களையும், கடற்றொழிலாளர் களையும் அழிக்க நினைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடவேண்டும் என்றார்
Post a Comment