ஆசிரியையின் மரணத்துக்கு நீதி கோரி கல்வி அமைச்சு முன் கவனயீர்ப்புப் போராட்டம்
ஒஸ்மானியா கல்லூரி அதிபர் ஒருவரின் தொந்தரவு காரணமாக ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன்பாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நல்லூர் கிட்டு பூங்கா முன்பாக ஒன்று கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கிருந்து ஊர்வலமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று அங்கு அமைதி வழியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தில் அமைச்சர் இல்லாதா காரணத்தால் அங்கிருந்து பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் அமைச்சருக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment