தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் சுமார் 4 ஆயிரத்து 500 மீன குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை அங்கீகரிக்க இயலாது எனத் தெரிவித்திருக்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், இவை தொடர்பாக பேச்சுவார்த்தை ஊடாக பேசி தீர்ப்பதற்கே நாங்களும் விரும்புகிறோம். அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும். இல்லையேல் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து நாங்களும் போராட்டங்களை நடாத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகள் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே மேற்படி விடயத்தை கூறியிருப்பதாக அறிய முடிகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை பகுதியை அண்மித்த பகுதியில் புதிதாக வாடிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் தொடர்ந்தும் மௌனமாக இருந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் ம க்கள் போராட்டங்களினால் தொடர்ந்தும் கடலட்டை பிடிக்க முடியாத நிலை உருவாகியிருக்கும் நிலையில், முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக பிரச்சினைகளை பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முல்லைத்தீவு மாவட்ட கட ற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளும்படி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்தவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.
Home
/
இலங்கை
/
தென்பகுதி மீனவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு - போராட்டத்துக்குத் தயாராகும் முல்லை மீனவர்கள்
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment