மாகாணசபைத் தேர்தல் எப்போது ? நாளை முடிவு !
மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்று நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் நாளை முடிவு செய்வார்கள் என சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று அறிவித்தார்.
‘நாளை நடக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்று முடிவு செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து விட்டு நாளை கட்சித் தலைவர்களுக்கு தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால், நான் அவரிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கும்.” என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
Post a Comment