இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்கள் நேற்று (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறினவால் வழங்கப்பட்டபோது காதர் மஸ்தான் எனும் இஸ்லாமியரான நாடாளுடன்ற உறுப்பினருக்கு இந்து மத விவகார பிரதி அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment