இலங்கை

அமெரிக்க கடற்படைக் குழு சிறிலங்கா விஜயம்


அமெரிக்க கடற்படையின் அனைத்துலக திட்டங்களுக்கான பிரதி உதவி செயலர் றியர் அட்மிரல், பிரான்சிஸ் டி மோர்லி தலைமையிலான குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கே அமெரிக்க கடற்படையின், அனைத்துலக திட்டங்களுக்கான குழு சிறிலங்கா வந்துள்ளது.

இந்தக் குழுவினருக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரின் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் பியால் டி சில்வா ஆகியோரையும், றியர் அட்மிரல், பிரான்சிஸ் டி மோர்லி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment