Video Of Day

Breaking News

நிதி மோசடி மற்றும் நம்பிக்கைக் தூரோகக் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திற்கு  உணவுப்பொருட்கள் வாங்கியதில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு போலி செலவு கணக்கு காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனைவி சாரா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருந்தது.

இந்நிலையில், சாரா மற்றும் பிரதமர் அலுவலக முன்னாள் இயக்குனர் எஸ்ரா சைடாப் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதால் அவர்கள் மீது ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வரிபணத்தை  தவறான வழியில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் நேதன்யாகு மனைவி சாரா மீது சுமத்தப்பட்டுள்ளது.

68 வயதாகும் நேதன்யாகு 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராக இருந்து வருகிறார். அவர் மீதும் லஞ்சம், மோசடி மற்றும்  நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவைதொடர்பாக, அவரது பதவி காலத்தில் இம்மாதிரியான பல விசாரணைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments