Header Ads

test

ரஜினிக்கு யாழிலும் தலையிடி!

ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில்  சுவரொட்டிகளை இளைஞர் சிலர் கிழித்தெறிந்ததுடன்இ அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு விவகாரத்திற்கு பின்னர் அங்கு சென்ற ரஜினிகாந்த்இ போராடும் மக்களை அவமதிக்கும் விதமாக பேசி பின்னர் உலகெங்கிலுமிருந்து தமிழர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

யாழிலும் திரையரங்குகள் சிலவற்றில் காலா திரையிடப்படவுள்ளது. அதற்கான சுவரொட்டிகள் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள நிலையிலேயேஇ அவற்றை இளைஞர்கள் கிழித்தெறிந்துள்ளனர்.

No comments