தமிழரே பூர்வீக குடிகள்:சவால் விடும் முதலமைச்சர்!

உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டு வரப்படாது நம்மால் மௌனம் காக்கப்பட்டால் பொய்மைகள் நாடுபூராகவும் உலாவத் தொடங்கிவிடுவன. இன்று அவ்வாறான ஒருநிலையே எழுந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் சோழர் படையெடுப்பின் போதுவந்தவர்களே இலங்கைத் தமிழர்கள் என்று கூறிவருகின்றார்கள் பெரும்பான்மையினர். உண்மைஅதுவல்ல. இலங்கையின் மூத்தகுடிகள் நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழர்களே என்பது இப்பொது வரலாற்றுரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.என்றாலும் சுயநலம் கருதி,சிங்கள அறிஞர்கள் உண்மையைத் தெரிந்தும் அதைத் திரிபுபடுத்தி சொல்லிவருகின்றார்கள். அவர்களின் பொய்மைகள் வாய்மைக்குள் அடங்கமாட்டாதென தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். 

எனது வரலாற்று அறிவின்படி தமிழரின் வரலாறு பற்றிய சில விடயங்களைச் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ளேன். அவற்றைப் பிழையென்று கூறக்கூடிய மேம்பட்ட அறிவு உங்களுக்கிருந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள். நான் நூல்களை வாசித்தறிந்து,எமது வரலாற்றுப் பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து எனது தரவுகள் சரியா நீங்கள் கூறுபவை சரியா என்ற முடிவுக்கு வருகின்றேன் என்று சவாலும் விடுத்துள்ளார். 

1. இலங்கையில் திராவிடர்கள் புத்தபெருமானின் பிறப்புக்குமுன்னரே இருந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். 

2. ஒரு முழுமையான மொழி என்ற முறையில் சிங்களமொழி பரிணாமம் பெற்றது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்குமுன் சிங்களமொழி என்று ஒன்று இருக்கவில்லை.

3. நவீன டிஎன் ஏசோதனைகள் தற்போதைய சிங்கள மக்கள் பண்டைய திராவிடரின் வாரிசுகளே என்பi உறுதிப்படுத்துகின்றன. திராவிடர் என்ற சொல்லும் தமிழர் என்றசொல்லும் தமிழரையேகுறிப்பிடுகின்றன. சமஸ்கிருதம் பேசிய மக்களுக்கு தமிழர் என்று உச்சரிக்கமுடியாததால் அவர்களே தமிழர்களைத் திராவிடர் என்றுஅழைத்தார்கள். 

4. சிங்களமொழியானது தமிழ்,பாளிமற்றும் அக் காலத்தையபேச்சுமொழிகளில் இருந்தே உருப்பற்றது. 

5. சிங்களவர் என்றமுறையில் வடமாகாணம் பூராகவும் எந்தக் காலகட்டதிலும் சிங்கள மக்கள் இங்குவாழவில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்தபண்டைய இலங்கையில் பின்னர் ஒருகட்டத்திலேயே சிங்களமக்கள் உருவெடுத்தார்கள். அவர்கள் தற்போதைய வடமாகாணத்தின் தெற்குப் பக்கமாக வாழ்ந்துவந்தார்கள். 

அவர் எனது கூற்றைமறுத்து தனது தரவுகளை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார். எனது கூற்றுக்களே அவர்களைக் கோபமடையச் செய்து சிந்திக்கவும் வைத்துள்ளது. உண்மைநிலையை உணர்;த்தினால் சிங்களமக்கள் சீற்றமடைவார்கள் என்பதுஎனக்குத் தெரியும். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சிங்களமக்கள் இதுவரையில் நிர்மாணித்துள்ள பொய்மையான வரலாற்றைஎதிர்ப்பவன். உண்மைவெளிவரவேண்டும் என்றவிருப்பம் உடையவன். 

பொய்மையைஉண்மைஎன்றுசித்தரித்துஒருசாரார் நன்மைகளைப் பெற்று வரப் பார்ப்பதும் கருத்துக்கெடுக்கப்படவேண்டும். இவ்வாறானநிலையில்த்தான் பொய்மைகளைவிமர்சித்துவருகின்றேன். 

பொய்மைகளின் வழிநின்றுசீற்றமடைபவர்களுக்குஉண்மையைஎடுத்துக் கூறுவதுபிழையன்று. அவ்வாறுசெய்யாவிட்டால் பொய்மையைஎப்பவேண்டுமானாலும் பலாத்காரமாகநிலைநிறுத்தலாம் என்றாகிவிடும். உண்மைக்குஒருபலம் உண்டு. அதுபற்றிஆதிசங்கரரின் குருவின் குருவானகௌடபாதர் என்பவர் கூறியுள்ளார். உண்மையானதுஆயிரம் பொய்மைகளுக்குமத்தியிலும்சுடர் விட்டுப் பிரகாசிக்கக் கூடியதுஎன்றார். அதன் சக்திஅது. எனவேஉண்மையைக் கூறினால் மற்றவர்கள் ஆத்திரப்படுவார்கள் என்றுஎக்காலத்திலும் மௌனம் சாதிக்கவேண்டும் என்றுஎண்ணுவதுமடமை. 

பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டுமார்ச்மாதம் வெளிவந்ததமதுஅண்மைய நூலான“இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் - கி.மு 250 – கி.பி 300”என்ற நூலின் தமதுபதிப்புரையில் (பக்கம் ஓஐஏ) பின்வருமாறு கூறுகிறார் - 

“இலங்கையின் மூன்றிலொருபாகத்திலேதமிழர் சமுதாயம் கி.முமுதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டதுஎன்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழிபேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்தசிற்றரசுகள் பலவற்றைஉருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது. நாகர் தமிழ் மொழிபேசியவர்கள் என்பதாலும்,ஆதி இரும்புக் காலப் பண்பாட்டைப் பிரதானமாகஅவர்களே இலங்கையிற் பரப்பினார்கள் என்பதாலும் கி.முஏழாம் நூற்றாண்டுமுதலாகத் தமிழ் ஒருபேச்சுவழக்குமொழியாகநிலைபெற்றுள்ளமைஉய்த்துணரப்படுகின்றது. தமிழ் மொழியின் தொன்மைபற்றிதமிழ்நாட்டுத் தொல்பொருட் சின்னங்களைஆதாரமாகக் கொண்டுநிர்ணயிக்கமுடியாதவற்றை இலங்கையிற் கிடைக்கின்றதமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின்அடிப்படையிலேயேசொல்லமுடிகின்றமைஒருகுறிப்பிடத்தக்க விடயமாகுமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment