Header Ads

test

கட்டைக்காட்டில் தெற்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு:பதற்றம்!


வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த 8 தென்னிலங்கை மீனவர்கள் உள்ளுர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்களது மூன்று படகுகளும் கடலட்டைகளுடன் உள்ளுர் மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே தென்னிலங்கை மீனவர்களிற்கு ஆதரவாக இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தினர் களமிறங்கியதையடுத்து முறுகல் நிலையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்களை சிறைப்பிடித்த உள்ளுர் மீனவர்களை குற்றஞ்சாட்டியிருந்த காவல்துறை சிறைப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவித்துவிட்டு கைது செய்த உள்ளுர் மீனவர்களை சிறைப்பிடிக்க முற்பட்டதையடுத்தே குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிற்கும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரிற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடலில் கைதுகளிற்கு காவல்துறை பொறுப்பாகாது என தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விடயத்தை கையாள  கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிற்கு தகவல் தெரிவிக்க கோரியிருந்தார்.

இந்நிலையில் அங்கு வந்துசேர்ந்திருந்த கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை பொறுப்பேற்றதுடன் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே உள்ளுர் மீனவர்களால் அறிவிக்கப்படாத நிலையில் காவல்துறை மற்றும் படையினர் தென்னிலங்கை மீனவர்களிற்கு ஆதரவாக பிரசன்னமாகியமை அவர்களது உறவினை வெளிப்படுத்துவதாக தென்னிலங்கை மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments