சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்காலிக பொதுச் செயலாளர் நியமனம்
சிறீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொது செயலாளராக பேராசிரியர் ரொஹன லக்ஸ்மன் பியதாச மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை , சிறீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக தும்மிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தற்காலிக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களாக நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment