Header Ads

test

அரசியலமைப்பு தெரிவுக்குழுவிற்கு ஹக்கீம் உள்ளிட்ட மூவர் நியமனம்


சிறிலங்கா அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை உறுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. அதற்கென உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பான தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் , கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிலையியற் கட்டளைகளுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் அறிவித்தார்.
இந்த தெரிவுக் குழுவில் சபாநாயகர் , பிரதமர் , சபைத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அதிகாரபூர்வமாக செயற்படுகின்றனர்.

 அதேவேளை அதற்கு மேலதிகமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments