சந்தேகங்களை தோற்றுவித்துள்ள மன்னார் புதைகுழி
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களிலும் 5 ஆவது நாளாகவும்,இன்று வெள்ளிக்கிழமை(1) காலை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில மனித எலும்புகள் மீட்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
கடந்த திங்கட்கிழமை காலை 7 மணியளவில் அராம்பிக்ப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (1) 5 ஆவது நாளாகவும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து செல்கின்றது.
‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும்,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் 5 ஆவது நாளாக இன்றைய தினம் (1) ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில், கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-தொடர்ச்சியாக அழ்வுகள் இடம் பெற்று வந்த போது மனித எலும்புகள்,பற்கள்,தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் அகழ்வகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment