ரெஜீனாவிற்கு நீதி கோரி பல்கலைக்கழகமும்
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரெஜினாவிற்கு நீதிகோரி,யாழ்;.பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இன்று மதியம் பல்கலைக்கழக வளவில் ஒன்று கூடிய ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கண்டன போராட்டத்தில் குதித்தனர்.அத்துடன் வளாகத்திற்கு வெளியே வந்து பலாலி வீதியை பரமேஸ்வரா சந்தியில் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அந்தப் பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பிரதான வீதியை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையிலேயே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருந்தனர். இதனால் பரமேஸ்வரா சந்திப்பகுதியினூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டு போயிருந்தது.
காலை வேளை சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் மக்கள் சுழிபுரம்; பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
பாடசாலை சென்ன சுழிபுரத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி றெஜீனா, கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் கொலையாளிகள் போதைபொருள் அடிமையாளர்களென சொல்லப்படுகின்றது.
இந்நிலையிலேயே பாடசாலை சிறுமியின் உயிரை பாதுகாக்க முடியாத அரசம் அதனது காவல்துறை மீதும் அதற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பின் மீதும் மக்கள் கோபமுற்றுள்ளனர்.
இதன் வெளிப்பாடாகவே பல்கலைக்கழக மாணவர்களதும் மக்களது போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன.
Post a Comment