இலங்கை

கூப்பிட்டால் ஆமி வரவில்லை:கூட்டமைப்பு கவலை!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைத்தால் அவ்வப்பகுதி இராணுவ,கடற்படை தளபதிகள் சந்திப்பிற்கு செல்லவேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.


ஆனால் படை அதிகாரிகள் தம்மை மதிப்பதேயில்லையென நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடற்படையினர் மன்னாரில் புதிதாக முகாம் அமைப்பது தொடர்பில் கடற்படைத் தளபதியை சந்திக்க அனுமதி கோரினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சந்திக்குமாறு கூறுகின்றார். அதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்தால் அதற்கு பதிலே கிடையாது. அதுவரை அங்கே மீனவர்கள் தொழில்புரிய முடியாது தவிக்கின்றனர். இதனை எங்கு போய் கேப்பது. இதேநேரம் வடக்கிலே பாரிய உல்லாச விடுதிகள் பலவற்றினை இராணுவமே நடத்துகின்றது. அதேபோன்று வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பணையினர் தொழில் முயற்சியிலேயே ஈடுபடுகின்றனர்; என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே இத்;தகைய குற்றச்சாட்டுக்களினை மாவை சேனாதிராசா முதல் சிறீதரன் ஈறாக முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் படைத்தலைமை அழைக்கின்ற நிகழ்வுகளில் முன்வரிசையில் இதே அரசியல் தலைவர்கள் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment