சிறிலங்காவில் தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மோட்டார் வாகன தவறுகள் தொடர்பிலான தண்டப்பணத்தை செலுத்துவதில் சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தண்டப்பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிரதேச செயலகங்களில் இதற்கென தனியான பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக இந்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால எல்லை 14 நாட்களில் இருந்து 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட மற்றும் வாகனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தனர்.
தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் காரணமாக இந்த தண்டப்பணத்தை தபால் அலுவலகங்களில் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறைத்துக் கொள்வதற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment