சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான, கலாநிதி தயான் ஜயதிலகவை, ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
கலாநிதி சமன் வீரதுங்கவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், பிரான்சுக்கான தூதுவராகவும் தயான் ஜயதிலக பணியாற்றியிருந்தார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் திட்டங்களை வலுவாக எதிர்க்கும் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான, எலிய அமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளராகவும், கலாநிதி தயான் ஜயதிலக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment