சிவகுமாரன் தூபியில் துண்டு விரித்த ஈபிடிபி!
பொன். சிவகுமாரன் நினைவு தினம் நாளை செவ்வாய் கிழமை ஈபிடிபி கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நாளையதினம் ஈழப் போராட்டத்தில் மரணத்த கட்சியின் தோழர்களை நினைவுகூரும் விடுதலை வித்துக்கள் தினமும் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இனத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் மாலை நான்கு மணிக்கு விடுதலை வித்துக்கள் தினம் நடைபெறவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக பொன்.சிவகுமாரனின் நினைவு தூபியில் கடை விரிக்க கூட்டமைப்பு சார்பு வலிகிழக்கு பிரதேச சபை தலைவர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் துப்புரவு செய்து காத்திருக்க ஈபிடிபி முந்திக்கொண்டு கடை விரித்துள்ளது.
சிவகுமாரனின் நினைவு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ள வலிகிழக்கு பிரதேசசபையை கூட்டமைப்பு ஈபிடிபி ,சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே கைப்பற்றியிருந்தது.அதனால் கூட்டமைப்பு,ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து நினைவேந்தலை செய்வது பொருத்தமானதென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment